அறிமுகமும் அமைப்பும் / Introduction and structure

உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது
(ஆட்சிமுறை அமைப்பு).

The Tamils living in different parts of the world, in order to preserve their cultural identity and observe their traditions and values, need to maintain familiarity with Tamil and be knowledgeable about their heritage. Recognising this fact and for meeting the felt and emerging needs of the Tamil Communities and others interested in Tamil studies, the Chief Minister of the Government of Tamil Nadu, announced at an International Seminar and Conference on Information Technology in February 1999 that a Tamil Virtual University (TVU) would be setup. This University has been established in pursuance of that announcement. The functions of TVU are guided by a Board of Directors and is administered by a full time Director. (Organisational structure)

த.இ.ப. பணித்திட்டங்கள் / Programmes of TVU
த.இ.ப. வின் பணித்திட்டம் பல்வகைப்பட்டவை. இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி, பலவற்றைக் கொண்டுள்ளது (படம்).
The functions of TVU include Internet based Educational Programmes, Digital
Library and Development of Tamil computing
(Fig.) .
கல்வித் திட்டம்/ Educational Programme
மின் நூலகம் / Digital Library
கணித்தமிழ்ப் பணிகள்/ Development of Tamil Computing
பின் / back
This site is best viewed at 1024x768 Screen Resolution and 32 Bit True Color Setting
--------------------------------------------------------------------------------
©Copyright 2000 Tamil Virtual Academy, Chennai, India. All Rights Reserved. Disclaimer