2.4 கருப்பொருள்

ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்களில் வாழும் உயிரினங்களும் வழங்கும் பொருள்களும் ‘கருப்பொருள்’ என வழங்கப்படுகின்றன. அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப வேறு வேறாக விளங்கும் அக்கருப்பொருள்களை இலக்கண நூல்கள் பலவாறு வகைப்படுத்தும். நம்பியகப் பொருள் 14 வகையான கருப்பொருள்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. அவையாவன

  1. ஆரணங்கு (தெய்வம்)
  2. உயர்ந்தோர்
  3. உயர்ந்தோர் அல்லோர்
  4. புள் (பறவை)
  5. விலங்கு
  6. ஊர்
  7. நீர்
  8. பூ
  9. மரம்
  10. உணவு
  11. பறை
  12. யாழ்
  13. பண்
  14. தொழில்

குறிஞ்சி முதலான ஐவகைத் திணைகளுக்கும் (நிலங்களுக்கும்) உரிய கருப்பொருள்களின் தொகுப்பாகக் கீழ்வரும் பட்டியல் தரப்பட்டுள்ளது.

ஐந்திணைக் கருப்பொருள்கள்

பெரிதாக்குக

எண் கருப் பொருள்கள் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல்
1 ஆரணங்கு (தெய்வம்) முருகன் கொற்றவை திருமால் இந்திரன் வருணன்
2 உயர்ந்தோர் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி விடலை, மீளி, எயிற்றி குறும்பொறை நாடன் தோன்றல், கிழத்தி ஊரன், மகிழ்நன், மனைவி சேர்ப்பன்
3 தாழ்ந்தோர் கானவர்,
குறவர் - குறத்தியர்
எயினர்- எயிற்றியர்,
மறவர் - மறத்தியர்
இடையர் - இடைச்சியர்,
ஆயர் - ஆய்ச்சியர்
உழவர் -உழத்தியர் கடையர்- கடைசியர் நுளையர்-நுளைச்சியர் பரதர்-பரத்தியர்
4 புள் (பறவை) கிளி, மயில் புறா,பருந்து,கழுகு காட்டுக்கோழி அன்னம், நாரை, மகன்றில் கடல் காகம்
5 விலங்கு புலி, யானை, கரடி, சிங்கம் செந்நாய் மான், முயல் எருமை, நீர்நாய் சுறாமீன்
6 ஊர் சிறுகுடி குறும்பு பாடி பேரூர், மூதூர் பாக்கம், பட்டினம்
7 நீர் அருவி நீர், சுனை நீர் --------- குறுஞ்சுனை, காட்டாறு ஆறு, கிணறு, குளம் உவர்நீர்க் கேணி
8 பூ குறிஞ்சிப் பூ, காந்தள் பூ, வேங்கைப் பூ குரவம் பூ மரவம் பூ முல்லை, பிடவம், தோன்றி தாமரை, குவளை நெய்தல், தாழை
9 மரம் சந்தனம்,தேக்கு, அகில், மூங்கில் உழிஞை, பாலை, ஓமை கொன்றை, குருந்தம், காயா காஞ்சி, வஞ்சி, மருதம் புன்னை, ஞாழல்
10 உணவு மலைநெல், தினை, மூங்கில்அரிசி வழிப்பறி, கொள்ளையிட்டுக் கவர்ந்தவை வரகு, சாமை, முதிரை நெல்லரிசி மீனும் உப்பும் விற்றுப் பெற்ற உணவுப் பொருள்
11 பறை தொண்டகப் பறை துடி ஏறுகோட்பறை நெல்லரி, கிணை, மண முழவு மீன்கோட் -பறை,நாவாய்ப் பம்பை
12 யாழ் குறிஞ்சி யாழ் பாலை யாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரி யாழ்
13 பண் குறிஞ்சிப் பண் பஞ்சுரம் சாதாரி மருதப் பண் செவ்வழிப் பண்
14 தொழில் வெறியாடல், தினையும் மலை நெல்லும் விதைத்தல், தேன் அழித்தல், கிழங்கு எடுத்தல், அருவி நீர் ஆடல் போர், பகற்சூறை ஆடல் சாமை, வரகு விதைத்தல் களை கட்டல்,கடா விடல்,குழலூதுதல் குரவை ஆடுதல், கொல்லேறு தழுவுதல் வயல் களை-கட்டல்; அரிதல், கடா விடல், விழாச்செய்தல்,புதுநீர் ஆடுதல் மீன் பிடித்தல், உப்பு உண்டாக்கல், மீன் உணக்கல் கடல் ஆடுதல்.