ஆம்பல் |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
|
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற |
|
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
|
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
உரை |
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு |
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, |
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி |
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் |
|
5 |
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, |
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, |
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, |
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, |
|
10 |
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் |
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற |
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் |
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, |
|
15 |
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், |
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, |
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், |
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! |
|
20 |
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் |
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என |
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், |
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, |
|
25 |
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
நாணினள் இறைஞ்சியோளே பேணி, |
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, |
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த |
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்.
|
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, |
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு |
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, |
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, |
|
5 |
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, |
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் |
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் |
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், |
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, |
|
10 |
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ |
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! |
|
அது புலந்து உறைதல் வல்லியோரே, |
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, |
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, |
|
15 |
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, |
வைகுநர் ஆகுதல் அறிந்தும், |
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே! |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் | |
உரை |
356.மருதம் |
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை |
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை |
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித் |
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் |
|
5 |
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
பொற் தொடி முன்கை பற்றினனாக, |
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, |
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் |
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய |
|
10 |
கற் போல் நாவினேனாகி, மற்று அது |
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் |
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் |
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் |
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் |
|
15 |
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, |
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே |
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை |
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன |
|
20 |
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர் | |
உரை |
மேல் |