கரந்தை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |