பதிப்புரை | இனி முனிவரின் இலக்கண உரைகளைப் பார்க்கலாம். தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, விருத்தியுரைத் திருத்தம் என்பவை அவர் பெயரால் வழங்கும் இலக்கண உரைகள். இவை மூன்றும் மூன்று திறத்தன. ஒன்று பேருரை; மற்றொன்று கண்டன உரை; மூன்றாவது திருத்த உரை. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், முதற்சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் முனிவர் இயற்றிய பேருரையே தொல்காப்பியச் சூத்திர விருத்தி. நெஞ்சை அள்ளும் நடையும் நினைவில் பதியும் கருத்துகளும் கொண்ட இந்நூல் புலவர்க்கு விருந்து. குறைநூல் எனினும் முனிவரின் இலக்கணப் புலமையை எடு்த்துக்காட்டுவது இதுவே. இதற்கு முற்றிலும் மாறுபட்டது இலக்கண விளக்கச் சூறாவளி. இது அளவால் மிகவும் சுருங்கியது; வெறும் கண்டனக் குறிப்புகளின் கோவை; ஆதீனங்களுக்கு நடுவே நடந்த போராட்டத்தின் விளைவாக, வேண்டும் என்றே எழுதப்பட்ட குறுநூல்; துண்டுப் பிரசுரம் என்றாலும் தவறு ஆகாது. இக்குறிப்புகளை இலக்கண விளக்கத்தில் இணைத்து எழுதாமல், முனிவர் தனியாக எழுதியதன் உள்நோக்கம் உய்த்துணரத் தக்கது. ‘அநியாய கண்டனம்’ என்ற மறுபெயர்.56 இதற்கு மெத்தவும் பொருந்தும் இவ்விரண்டு நூல்களிலிருந்தும் எல்லா வகையிலும் வேறுபட்டது விருத்தியுரைத் திருத்தம். மற்ற இரண்டையும் போல இது தனி நூல் அல்ல; வெறும் திருத்தக் குறிப்புகளின் திரட்டு. இதனை ஆராய்வதற்கு முன்பாக இந்நூல்கள் மூன்றும் எழுந்த வரிசை முறையை அறிவது நல்லது. இந்த நூல்களின் காலவரிசை குறித்துக் கருத்து வேறுபாடு57 காணப்படுகிறது. சாமிநாதையர் குறிப்பிடும் (1925. முகவுரை பக். 3) மரபுவழிச் செய்தி தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, புத்தம் புத்துரை என்று வரிசைப்படுத்தும். இதற்கு மாறாக நெல்லையப்பப் பிள்ளையின்58 கருத்தைத் தழுவி, முதன் முதல் எழுதப்பட்டது புத்தம் புத்துரை; இறுதியாக எழுதப்பட்டது தொல்காப்பியச் சூத்திர விருத்தி என்று கூறுவார் க. விநாயகம். இலக்கண விளக்கச் சூறாவளியில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களில் முனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியைக் குறிப்பிட்டுள்ளார். எனவே சூறாவளிக்கு முந்தியது சூத்திர விருத்தி என்பது தெளிவு. தொல்காப்பியச் சூத்திர விருத்தியைச் சிவஞான மாபாடியத்திலும் ஐந்து இடங்களில்59 முனிவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோலப் புத்தம் புத்துரையை அவர் எங்கும்60 பெயர் சுட்டிக் ------------------------ 56சி. வை. தாமோதரம் பிள்ளை, 1889, பதிப்புரை பக். 7. 57சோம. இளவரசு, 1963. பக். 199; மு. வை. அரவிந்தன், 1968. பக். 422; 1995. பக். 538; க. விநாயகம், 1991. பக். 8; ச. பாலசுந்தரம், இலக்கண விளக்கச் சூறாவளி, (இலக்கணக்கருவூலம் 3), அண்ணாமலைநகர், 1992. பக். 295-298. 58சிவஞான போதமும் சிவஞான பாடியமும், கழகம், சென்னை, 1968. பக். 16-19. 59மேலது, 1968. பக். 16, 36, 65, 116, 267. | |
|
|