பக்கம் எண் : 46
  

பதிப்புரை


(இல. சூறா. பக். 107) என்றும் “தொல்காப்பியத்தில் கிடந்தவாறே படியெடுத்து
எழுதித் தமது அறியாமையை விளக்கினார் என அறிக.”
(இல. சூறா. பக். 129)
என்றும் வைத்தியநாத தேசிகரிடம் குறை கண்ட சிவஞான முனிவர் பிறருடைய உரைப்
பகுதிகளை இவ்வாறு எடுத்து எழுதிப் புத்துரை ஒன்றை உருவாக்கியிருப்பார் என்று
எண்ணவும் ஏற்கவும் தயக்கம் ஏற்படுகிறது.

     சங்கர நமச்சிவாயர் சாமிநாத தேசிகரின் தலைமாணாக்கர். தமது நன்றி மறவாப்
பண்பைத்,
 
  “தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட
திருவா வடுதுறைத் தேசிக னாகிய66
கருணையங் கடலையென் கண்ணைவிட் டகலாச்
சுவாமி நாத குரவனை யனுதினம்
மனமொழி மெய்களிற் றொழுது”

என்னும் அடிகளில் (நன். சிற. பாயி. உரை) அவர் புலப்படுத்தியுள்ளார். தம்முடைய
ஆசிரியரின் கருத்துகளைத் தமது உரையில் தழுவிக்கொள்ளவும் அவர் தவறவில்லை.
காட்டாக வினையடி நான்கு என வகைப்படுத்தி, “இயல்பாகிய வினையடி ஒன்றும்
ஏனைப் பெயர், இடை, உரியடியாகப் பிறந்த வினையடி மூன்றும் ஆம்.”
(நன்.
167)) என்று அவர் விளக்குவார். இவ்வுரை, “பெயர்வினை யிடையுரி நான்கடியானும்,
பிறக்கும் வினை”
என்னும் இலக்கணக் கொத்து நூற்பாவைத் (68) தழுவியது.

     இதுபோலவே வினையெச்சங்களின் முடிபை விளக்கும் பகுதியில்,
“இவ்வினையெச்சங்கள் நடந்து வந்தான், மழை பெய்ய நெல் விளைந்தது எனக்
காரணப் பொருட்டாயும் நெல் விளைய மழை பெய்தது எனக் காரியப்
பொருட்டாயும் உண்ண வந்தான் எனக் காரணம், காரியம் என்னும்
இருபொருட்டாயும்,

 
  “......கடிக்கமல முகங்காட்ட.....
.......கருநெய்தல் கண்காட்டும்”

(தே. மேகராகக்குறிஞ்சி 1:3-4)

எனக் காரண காரியம் இரண்டும் இன்றியும் உழுது பயன் கொண்டான் வேந்தன்
எனத் தலைமைபற்றியும் உழுது பயன் கொண்டான் வறியன் என அஃது
இன்மைபற்றியும் வருதல் காண்க.”
(நன். 344) என்று சங்கர நமச்சிவாயர் எழுதுவது
சாமிநாத தேசிகரின் (இல. கொ. 84: 7-8) உரையைத் தழுவியது. இவ்வாறு தம்
-------------------------
     66இந்த அடி சிவஞான முனிவரால் சேர்க்கப்பட்டிருக்கக் கூடும்.