பக்கம் எண் : 47
  

பதிப்புரை


ஆசிரியரின் கருத்துகளைப் பெயரியலில் தழுவிக்கொள்ள வேண்டும் என்று சங்கர
நமச்சிவாயர் உண்மையில் எண்ணியிருந்தால் அதை அவரே செய்திருப்பார். அவர்
செய்யாதிருக்கவும் அவருடைய உரையில் இலக்கணக் கொத்து நூற்பாக்களையும் உரைப்
பகுதிகளையும் சிவஞான முனிவர் இடைமடுத்து எழுதியது பொருந்தாது. வலிவற்ற
காரணங்களைக் காட்டிப் பிறர்67 இதற்கு அமைதி காண முயல்வார்கள். காரணம்
எதுவாக இருந்தாலும் முனிவர் கடைப்பிடித்த முறை நல்ல உரைமரபுக்கு வழிகாட்டாது
என்பது கருதப்பட வேண்டும்.

     இவற்றை எல்லாம் எடுத்துக்காட்டி, முனிவர் திருத்தி எழுதிய பகுதிகளில் சிறந்த
விளக்கங்களே இல்லை என்று சுட்டிக்காட்டுவது என் நோக்கம் அல்ல. நல்ல சில
விளக்கங்களும் உண்டு. காட்டாகச் சொற்களை உச்சரிக்கும் முறைக்கு, “எல்லாச்
சொற்களையும் கூறுங்கால் பொருள் சிறக்கும் இடத்து எழுத்தினை எடுத்தும்
அயலெழுத்தினை நலிந்தும் ஏனை எழுத்துக்களைப் படுத்தும் கூறுக.”
(நன். 132)
என்று முனிவர் தரும் விளக்கத்தைக் கூறலாம். இதுபோலவே இன் என்னும் இறந்தகால
இடைநிலையைப் பற்றி, “இன்னிடைநிலை எஞ்சியது எனக் கடைக் குறைந்தும்
போனது என முதல் குறைந்தும் வரும்”.
(நன். 142) என்றும் சிவஞான முனிவர்
மேனிலை விளக்கம் எழுதுவார். இளம்பூரணர், மயிலைநாதர் முதலிய
உரையாசிரியர்கள்68 இக்கருத்துகளைத் தொட்டிருந்தாலும் சிவஞான முனிவரின்
விளக்கங்களில் அமைந்துள்ள தெளிவும் பொருளாழமும் அவர்களுடைய உரைகளில்
அமையவில்லை என்பது உண்மை.

     சிவஞான முனிவரின் திருத்தங்களோடு தொடர்புள்ள இன்னொரு கருத்தையும்
இங்கு ஆராய வேண்டும். புத்தம் புத்துரையில் பல இடங்களில் பிரயோக விவேக
உரைப் பகுதிகள் விரவியுள்ளதாகச்69 சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல.
சிவஞான முனிவர் வடமொழி இலக்கணக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர். அதனால்
பிரயோக விவேகக் கருத்துகளை அவர் ஏற்று எழுதும் இடங்கள் புத்தம் புத்துரையில்
இல்லாமல் இல்லை. சந்தியக்கரம் பற்றிய விளக்கம் (நன். 73, 125) இதற்குத் தக்க சான்று.
என்றாலும் இலக்கணக் கொத்தை மதிப்பதுபோல அவர் பிரயோக விவேகத்தை மதித்துப்
போற்றவில்லை. வடமொழி இலக்கணத் தாக்கம் இருவருக்கும் பொது என்றாலும்
சுப்பிரமணிய தீக்கிதரின் கொள்கைகள் எல்ாவற்றையும் முனிவர் ஏற்பதில்லை. காட்டாகத்
தொல்காப்பியத்தின் முதல்நூல் எது
--------------------------
67க. ப. அறவாணன், 1977. பக். 167; க. விநாயகம், 1991. பக். 69.
68இப்பதிப்பின் அடிக்குறிப்புகளில் (நூ. 132, 142) காண்க.
69க. விநாயகம், 1991. பக். 66, 75, 358.