பக்கம் எண் : 50
  

பதிப்புரை


     இந்த உரைவெள்ளத்துக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிய விசாகப்பெருமாளையர்
காண்டிகையின் உரைப் பாயிரம் இந்த உண்மையை,
 
  “முன்னூ லொழியப் பின்னூல் பலவினு
ளெந்நூ லாரு நன்னூ லாருக்
கிணையோ வெனத்தமி ழினிதுணர் பவர்க்கெலாந்
துணையீ தாமெனத் தோன்றுநன் னூற்கு
நயன்மிகு சங்கர நமச்சி வாயனாற்
பயன்மிகச் செய்திடப் பட்டதன் பின்னர்
தவஞா னந்தனிற் சால்புகூர் துறைசைச்
சிவஞான முனிவனாற் றிருத்திடப் பட்ட
விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கிக்
கருத்துப் பதப்பொருள் காட்டுமற் றுஞ்சில
வுறுமுறை காண்டிகை யுரையுளங் கொண்டு
சிறுவரு முணர்தருஞ் செவ்வியிற் செய்தனன்”

என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே இந்தக் காண்டிகையுரைகள் எல்லாம்
மயிலைநாதர் உரையையும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவர் திருத்திய
விருத்தியுரையையும் தழுவி எழுதப்பட்டன என்று பொதுப்படக் கூறலாம்.

     பத்தொன்பதாம் நூற்றாண்டில் நன்னூலுக்கு எழுந்த காண்டிகையுரைகளுள்
விசாகப்பெருமாளையர் (1834), இராமாநுச கவிராயர் (1847), ஆறுமுக நாவலர் (1889),
வை. மு. சடகோபராமாநுஜாசாரியர் (1892)72 ஆகியோர் இயற்றிய நான்கு உரைகளும்
குறிப்பிடத் தக்கன. இவற்றுள் கவிராயர் இயற்றியது விருத்தியுரை. இதற்கு இராமாநுச
காண்டிகையுரை என்ற சிறப்புப் பெயரும்73 உண்டு. மற்ற மூன்றும் பாடநூலுக்கு
ஏற்றவாறு எளிய நடையில் சுருக்கமாக எழுதப்பட்ட காண்டிகையுரைகள்.

     சென்ற நூற்றாண்டில் இலக்கணம் என்றால் நன்னூலே; காண்டிகை என்றால்
விசாகப்பெருமாளையரின்74 காண்டிகையே. இந்த உரையின் செல்வாக்கு அந்த
---------------------------
     72இக்காண்டிகையின் முதல் பதிப்புக்கு இணையாசிரியர் கோவிந்தாசாரியர்.
பிந்திய பதிப்புகளுக்குச் சே. கிருஷ்ணமாசாரியரும் வை. மு.
கோபாலகிருஷ்ணமாசாரியரும் இணையாசிரியர்கள்.
     73இராமாநுச கவிராயர், நன்னூல் விருத்தியுரை, சஞ்சீவிராயன்பேட்டை
(சென்னை), 1847. பக். 336.
     74இவருடைய இளவல் சரவணப்பெருமாளையர் நன்னூலுக்கு உரை
இயற்றினார்.