பக்கம் எண் : 52
  

பதிப்புரை


     இதற்கு அடுத்ததாக 1922-இல் வெளிவந்த பவானந்தம் பிள்ளையின் நன்னூலே
இந்த நூற்றாண்டில் வந்த காண்டிகைகளுள் மிகவும் சிறந்தது. பழைய உரைகளையும்
இராமாநுச கவிராயர் உரையையும் தழுவி எளிய நடையில் அமைந்தது இவ்வுரை. இந்த
நூலின் அமைப்பும் அச்சும் இது ஒரு பவானந்தர் பதிப்பு என்பதைப் பறை
சாற்றுகின்றன. மயிலைநாதர் உரையைப் பின்பற்றிப் பொதுப் பாயிரப் பகுதிக்கும்
எழுத்தியலுக்கும் இடையில் சிறப்புப் பாயிரத்தின் உரையும் இராமாநுச கவிராயர்
விருத்தியுரையைத் தழுவி நூலின் இறுதியில் பொதுவியலும் இவ்வுரையில் மாற்றி
வைக்கப்பட்டுள்ளன. இலக்கிய வரலாறு போன்ற இதன் முகவுரையும் (பக்.  xi-xxiii)
தேர்வு நோக்கோடு நூலின் இறுதியில் இணைத்துள்ள பன்னிரண்டு அனுபந்தங்களும்
(பக். 284-365) பவானந்தம் பிள்ளையின் கடுமையான உழைப்பின் பயன். இவை
அனைத்தும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உற்றுழி உதவும் ஊன்றுகோல்கள்.
அவற்றுள் தமிழிலக்கண நூல்கள், நன்னூற் சூத்திர அகராதி, உரைவிகற்பங்களும்
விசேஷக் குறிப்புகளும், நன்னூல் சூத்திரத் தொகைவகை விளக்கம் முதலிய
அனுபந்தங்கள் அண்மையில் வெளிவந்த நூல்களிலும் ஆய்வேடுகளிலும் இடம்
பெற்றுவிட்டன. உதாரணமாக நன்னூலின் அமைப்பை வரைபடங்களாக விளக்கும்
நன்னூல் சூத்திரத் தொகைவகை விளக்கம் என்னும் பிற்சேர்க்கையை எழுநூறு
ஆண்டுகளில் நன்னூல் அப்படியே எடுத்து77 இணைத்துக்கொண்டது. பவானந்தரின்
நன்னூலுக்குப் பின்னர் இந்த நூற்றாண்டில் வெளிவந்த எந்த உரையும் அவ்வளவு
சிறப்பாக அமையவில்லை. என்றாலும் பவானந்தரின் காண்டிகை கல்வித்துறையில்
காலூன்ற முடியவில்லை. கவிராயரைப் பின்பற்றி இயல்களின் வைப்புமுறையில் அவர்
செய்திருந்த மாற்றம் அதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

     மொத்தத்தில் எளிமை, தெளிவு, சுருக்கம் என்பவற்றைக் காண்டிகையுரைகளின்
சிறப்பியல்புகள் என்றும் மாணவர்களுக்குத் தேர்வுப் பயிற்சி அளிப்பது அவற்றின்
தலைநோக்கம் என்றும் தொகுத்துச் சொல்லலாம். சொந்தமாக எழுதாமல் ஒருவர்
உரையைப் பார்த்து மற்றவர் எழுதியதால் இக்காண்டிகைகளுள் பல வெறும்
உரைப்போலிகளாக அமைந்துவிட்டன. இது அவற்றின் பொதுக் குறைபாடு.
 

பதிப்புகள்


     நன்னூலின் பதிப்பு வரலாறு அதன் உரை வரலாற்றைப் போலவே சற்று நீண்டது.
நன்னூலுக்குச் சென்ற நூற்றாண்டில் எளிய காண்டிகையுரை எழுதிய இயற்றமிழ்
ஆசிரியராகிய விசாகப்பெருமாளையரே ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த
------------------------------------
     77க. ப. அறவாணன், 1977. பக். 62-72.