பெட்பு என்பது, புறந்தருதலும் விரும்புதலுமாகிய குறிப்பும் பண்பும் உணர்த்தும்; சிறுபான்மை 1‘பெட்ப நகும்’ (சீவக. 1662) எனப் பெருமையும் உணர்த்தும். உ-ம் :2 ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’ 3‘யானும் பேணின னல்லனோ மகிழ்ந’ (அகம். 16) இவை புறந்தருதல் உணர்த்தின. ‘பெற்றோட் பெட்கும் பிணையை யாகென’ என்புழிக் ‘கணவனைப் புறந்தரும் விருப்பத்தையுடையை யாவாய்’ எனப் பிணை விருப்பத்திற்கு வந்தது. ‘அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்’ (புறம். 99) இது விருப்பம் உணர்த்திற்று. ‘பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் (களவி. 11). ‘காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்’ (கற்பி. 6) என ஆசிரியர் பெட்பின் பகுதியாகிய ‘பெட்டு’ என்னும் உரிச்சொல்லை4 உடம்போடு புணர்த்து ஓதிவாறும் காண்க. வெள். (நச்சினார்க்கினியர் உரையே) ஆதி பொருள் : பிணை - பெண்மான் - பெட்பு, அழகு பேண் - ஓம்புக - பெட்பு கவர்ச்சி
1. பொருள் : அரிய காவலை நீக்கிச் செய்த போரில் 2. பெட்ப நகும் பெரிதாக நகும். 3. பொருள் : மகிழ்ந, யானும் பாதுகாத்தேன் அல்லனோ’ 4. உடம்பொடு புணர்த்தல் சொல்லவேண்டிய ஒன்றைச் சொல்லவேண்டிய இடத்துச் சொல்லாமல் பொருத்திக் கொள்ளுமாறு வேறோர் இடத்துக் கூறுதல். உடம்பு இடம், உடம்பொடு புணர்த்தல் ஓரிடத்தில்சேர்த்தல் பெட்பு என்னும் உரிச்சொல் விருப்பம் என்னும் பொருள் தரும். இதனை ஆசிரியர் உரியியலிற் கூற வேண்டும். கூறாமல் விருப்பம் என்னும் பொருளில் பெட்பின் பகுதியாகிய பெட்டு என்பதை, “ பெட்ட, வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்” எனவும், “காய்தலும் உவத்தலும், பிரித்தலும் பெட்டலும்’ எனவும் பிற இடங்களில் ஆண்டுள்ளார் ஆசிரியர் இது உடம்பொடு புணர்த்தலாம். |