82

பணை
  

333.

பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்.            (42)

(பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Paņai’, means missing and flourishing

ஆல்.

‘Paņai’ means being lost and becoming stout

பி. இ. நூ.

இல.வி. 2823

பணையே பிழைத்தலும் பெருத்தலும் இசைத்தலும்

இளம்.

இச்சூத்திரம் என்னுதற்றோவெனின், இவையெல்லாங் குறிப்புச் சொல்.

வ-று : ‘பணைத்துப் போய் வீழ்ந்தது’ என்றக்கால், பிழைத்துப்போய்
வீழ்ந்தது என்பதாம்.

‘பணைத்தோள்’  என்றக்கால்,  பெருந்தோள்  என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘பணைத்துவீழ் பகழி எனப் பணையென்பது பிழைத்தலாகிய
குறிப்புணர்த்தும்; அதுவேயன்றி ‘வேய்மருள் பணைத்தோள்’   (அகம்.1)
எனப் பெருப்பாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.

பெருமையாகிய   பண்புணர்த்தாது1     பெருத்தலாகிய    குறிப்பு
உணர்த்தும் என்பார் ‘பெருப்பு’ என்றார்.

தெய்.

இ-ள் : பணை யென்னுஞ் சொல் பிழைத்தல் என்பதன் பொருளும்,
பெருமை என்பதன் பொருளும் படும், எ-று.

உ-ம் : ‘பணைத்து  வீழ் பகழி’  இது  பிழைப்பு.  ‘பணைத்தோள்’
(அகம். 1) இது பெருமை.


1. பெருத்தலாகிய     குறிப்பு     முன்னிருந்த      நிலையின்
     வளர்ச்சியுற்றதாகிய  செயல்.  இச்செயல்  புலப்படுவதன்றாதலின்
     குறிப்பு என்றார்.   பிறர்  யாவரும்  பெருமையும்   பெருத்தலும்
     ஒன்றாகவே   கருதினர்.   ஆனால்  நந்சினார்க்கினியர்   இவர்
     கருத்தையே  ஏற்றார்.