83

நச்.

இது, குறிப்பு

இ-ள் :  பணையே   பிழைத்தல்   பெருப்பும்  ஆகும் -   பணை
பிழைத்தலாகிய   குறிப்பு   உணர்த்துதலேயன்றிப்  பெருப்பு    ஆகிய
குறிப்பும் உணர்த்தும், எ-று.

பெருமையாகிய  பண்பு   உணர்த்தாது   பெருத்தலாகிய    குறிப்பு
உணர்த்துதற்குப் ‘பெருப்பு’ என்றார்.

உ-ம் : அமர்க்க ணாமா னருநிற மூழ்காது
          பணைத்துவீழ் பகழிப் போக்கு நினைந்து கானவன்’ (நற்.165)

‘வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டு’ (அகம். 1)

எனவரும்.   1இப்பணை    மூங்கிலினை    யுணர்த்தல்   உரிச்சொல்
அன்மையுணர்க.

வெள்

(நச்சினார்க்கினியர் உரையே).

ஆதி

பொருள் : பணை-திரண்ட-பிழைத்தல், தவறுதல்.
             பெருப்பு-பெரிதாக.

படர்
 

334.

படரே யுள்ளல் செலவு மாகும்               (43)

(படரே உள்ளல் செலவும் ஆகும்).
 

ஆ. மொ. இல.

‘Padar’ means reflection and passing

ஆல்

‘Patar” means thinking and moving away.

பி. இ. நூ :

இல. வி. 2824

படரே வுள்ளலும் செலவும் சொல்லலும்


1. பணை  என்பது  மூங்கிலையும்  உணர்த்தும்.  அப்போது  அது
     பெயர்ச்சொல்;        பிழைத்தலையும்,        பெருத்தலையும்
     உணர்த்துமிடத்தே  உரிச்சொல்லாம்.