85

‘கறவை கன்றுவயின் படர’ (குறுந். 108)

எனவும் வரும்.

வெள்.

இ-ள்: படர்  என்னுஞ்   சொல்  உள்ளுதல்   என்னும்  குறிப்பு
உணர்த்தும்;   அதுவேயுமன்றிச்    செல்லுதல்   என்னும்    குறிப்பும்
உணர்த்தும், எ-று.

உ-ம்: ‘வள்ளியோர்ப்  படர்ந்து  புள்ளிற் போகி’ எனவும், ‘கறவை
கன்றுவயற்   படர’  எனவும்  படர்  என்பது   முறையே   உள்ளுதல்
செல்லுதல் என்னும் குறிப்புணர்த்தியவாறுணர்க.

ஆதி

பொருள்: படர்-துன்பம் பரவுதல் -நினைத்தல் செல்லுதல்

பையுள், சிறுமை.
  

335.

பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள            (44)

(பையுளும் சிறுமையும் நோயின் பொருள)
 

ஆ. மொ. இல.

‘Paiyuļ’ and ‘sirumai’ mean suffering

ஆல்

‘Paiyuļ’ and ‘ciŗumai’ mean disease

இளம்

வ-று : ‘பையுள் நல்யாழ்’ என்றக்கால், 1நோய் செய்யும் நல்யாழ்
என்பதாம்.

2 ‘சிறுமையுறுபவோ செய்பறி யலரே’ (நற். 1) என்றக்கால்,
நோயுறுப செய்யார் என்பதாம்.

சேனா

இ-ள் : ‘பையுள்மாலை’  (குறுந். 195)  எனவும்,  ‘சிறுமையுறுபவோ
செய்பறியலரே’  (நற்.  1)  எனவும்  பையுளும் சிறுமையும்  நோயாகிய
குறிப்புணர்த்தும், எ-று.


1.நோய் - துன்பம்

2.பொருள்- செய்வதறியாதார் துன்பம் உறுவரோ?