தெய் இ-ள் : பையுள் என்னும் சொல்லும் சிறுமை என்னும் சொல்லும் நோய் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘பையுள் மாலை’ (குறுந். 195) ‘சிறுமை யுறுபவோ செய் பறியலரே’ (நற் 1). நச் இதுவுமது. இ-ள் : பையுளும் சிறுமையும் நோயின் பொருளபையுளும் சிறுமையும் நோயாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் ; பையுள் மாலைப் பழுமரம்படரிய’ (களவியல். 4 உரை மேற்கோள்) ‘சிறுமையுறுப செய்பறி யலரே’ (நற் 1) என வரும். வெள் இ-ள் : பையுள் சிறுமை என்னும் உரிச்சொற்கள் நோய் என்னும் குறிப்புணர்த்துவன, எ-று. உ-ம் : ‘பையுள் மாலை’ எனவும், சிறுமையுறுபவோ செய்பறியலரே’ எனவும் வரும். ஆதி பொருள் : பையுள் - துன்பம் - நோய்ப்பட்ட சிறுமை - சிறியது - நோய்ப்பட்ட எய்யாமை |