87

சேனா

இ-ள் : ‘எய்யா மையலை  நீயும்  வருந்துதி’  (குறிஞ்சிப்.  8)  என
எய்யாமை அறிவினமையாகிய குறிப்புணர்த்தும், எ-று.

1 அறிதற் பொருட்டாய  எய்தல்  என்றானும்  எய்த்தல் என்றானும்
சான்றோர்   செய்யுட்கண்    வாராமையின்   எய்யாமை   எதிர்மறை
யன்மையறிக.

தெய்.

இ-ள் :   எய்யாமை    என்னுஞ்சொல்   அறியாமை   யென்னும்
பொருள்படும், எ-று.

உ-ம் : ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’         (குறிஞ்சிப். 8)

நச்.

இதுவுமது.

இ-ள் : எய்யாமையே   அறியாமையேஎய்யாமை  அறியாமையாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் :‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ (குறிஞ்சிப். 8) என வரும்.

அறிதல் என்னும் உடம்பாட்டிற்கு மறையாகிய அறியாமை  என்னும்
உரிச்சொல்லான் எய்யாமையை     உணர்த்தவே     அவ்வெய்யாமை
மறைச்சொல் என்பதூஉம்,  அதற்கு எய்த்தல்  என்னும்  உடம்பாட்டு்ச்
சொல்  உளது   என்பதூஉம்   பெற்றாம்.  அவ்வுடம்பாட்டை  ஓதாது
மறையை ஓதினார், மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வரும்   என்றற்கு.

2‘எய்த்து நீர்ச்சிலம் பின்குரை மேகலை’           (சீவக. 2481)

என்புழி  எய்த்து  என்பது  அறிந்து என்னும் பொருள் உணர்த்திற்று.3


1. இப்பகுதிக்கு நச். மறுப்புப் பார்க்க.

2. எய்த்து  எனும்  உடன்பாட்டுச்   சொல்லைச்  சிவப்பிரகாசரும்
      ஆண்டுள்ளார்.

புத்தனிச்சம் படினும் பொறாமையை
எய்த்து மற்றை யிருமணத் தம்மியில்
அத்தன் வைத்த அடிக்கம லங்களில்
முத்த ரிச்செஞ் சிலம்பு முழங்குற.   (பிரபுலிங்கலீலை.)

3. பொருள்   உணர்ந்து    நல்ல     நீர்மையுடைய    சிலம்பும்
      இனியஒலியையுடைய மேகலையும்..