88

வெள்.

இ-ள் :  எய்யாமை  என்னும்  உரிச்சொல்   அறியாமை  என்னும்
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் :எய்யாமை யல்லை நீயும் வருந்துதி’ என வரும்.

ஆதி

பொருள்: எய்யாமை-அம்பு-எய்யா நிலை-அறியாமை.

நன்று
  

337.

நன்று பெரிதாகும்                             (46)

(நன்று பெரிது ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Nanru’ means great

ஆல்.

‘Nanru’ means big

இளம்.

(உரையும் உதாரணமும் அடுத்த சூத்திரத்திற் காண்க)

சேனா.

இ-ள் : ‘நன்று மரிதுற்றனையாற் பெரும’ (அகம்.  10) என   நன்று
என்பது பெரிது என்னும் குறிப்புணர்த்தும், எ-று.

1 பெருமை    என்னாது  பெரிது   என்றதனான்  நன்று  என்பது
வினையெச்சமாதல் கொள்க.

தெய்.

இ-ள் :நன்று  என்பது  பெரிது  என்பதன் பொருள்படும்,  எ-று.

உ-ம் : ‘நன்றும் அறிதுற்றனையாற் பெரும’          (அகம். 10)


1. நன்று  என்பதற்குப் பெரிது  என்னும்  பொருள் கூறினமையால்
     அதாவது  பெருமை   என்று   பண்புப்   பெயர்ப்   பொருள்
     கூறாமையால்    நன்று       என்பதை    உரிச்சொல்லாகவே
     கொள்ளவேண்டும். நல்லது,     என்னும்  பொருள்படும் குறிப்பு
     வினைமுற்றன்று  இது.       ‘பெரிதாக’   என  வினையெச்சப்
     பொருளில்  வரும்  உரிச்சொல்  இது.