89

நச்.

இதுவுமது.

இ-ள் :  நன்று  பெரிது  ஆகும்நன்று  பெரிது  என்னும்  குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நன்று  மரிதுற்றனையாற்  பெரும’  (அகம். 10) என வரும்.

பெருமை   என்னாது   பெரிது  என்றதனான்,   நன்று    என்பது
வினையெச்சம் ஆயிற்று.

வெள்.

இ-ள் : நன்று என்பது  பெரிது  என்னும்  குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : நன்று  மரிதுற்றனையாற்  பெரும  (அகம். 10)  என வரும்.

ஆதி.

பொருள் : நன்று-நல்லது-பெரிய

தெவு
 

338.

தெவுக் கொளற் பொருட்டே                     (47)

(தெவு கொளல் பொருட்டே)
 

ஆ. மொ. இல.

‘Tevu’ is used to denote taking in

ஆல்.

‘Tevu’ means receiving

இளம்.

(நன்று  பெரிதாகும்,  தெவுக் கொளற்  பொருட்டே)  இவ்விரண்டு
சூத்திரமும் உரை நோக்கி ஒன்றாய் எழுதப்பட்டது.

வ-று : ‘நன்றும்    அரிதுற்றனையாற்    பெரும’    என்றக்கால்,
பெரிதுற்றனையால்   என்பதாம்.1‘நீர்த்தெவு      நிரைத்தொழுவர்’
(மதுரைக்.89) என்றக்கால், நீர் கொள்ளும் நிரைத் தொழுவர் என்பதாம்.


1. பொருள் :   நீரை      இடாவால்    முகந்து    கொள்ளும்
     வரிசையாகவுள்ள தொழில் செய்வோர்.