91

சேனா

இ-ள் : 1‘தாவி  னன்பொன் தைஇய  பாவை’ (அகம். 212) எனவும்,
 2‘கருங்கட்   டாக்கலை   பெரும்பிறி   துற்றென’ (குறுந்69)   எனவும்
தாவென்பது வலியும் வருத்தமும் ஆகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : தாவு  என்னும்  சொல்  வலி  என்பதன்  பொருண்மையும்
வருத்தம் என்பதன் பொருண்மையும் படும் எ-று.

உ-ம் :  ‘தாவி  னன்பொன் தைஇய பாவை’ (அகம். 212) இது வலி.
‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’ (குறுந்69) இது வருத்தம்.

நச்.

இதுவுமது.

இ-ள் : தாவே வலியும் வருத்தமும் ஆகும் தா வலியும் வருத்தமும்
ஆகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் :  ‘தாவில் நன்பொன் தைஇய பாவை’, ‘தாவாக் கொள்கைத்
தகைசால் சிறப்பின்’   எனவரும்.  தாவாக்கொள்கை  வருத்தமில்லாத
விரதம்.

இனி,

‘கருங்கண்     தாக்கலை   பெரும்பிறிதுற்று’  (குறுந்.  69)  எனத்
தாவுதலும்,  ‘தாவாத  இல்லை வலிகளும்’ எனக் கேடும்  உணர்த்துதல்
கூறிய கிளவி (உரி. 92) என்பதனாற் கொள்க.

வெள்.

இ-ள் : தா  வென்னுஞ்சொல்    வலியும்    வருத்தமு    மாகிய
குறிப்புணர்த்தும், எ-று.


பொருள் : 1. வலியில்லாத நல்ல பொன்னாற் செய்யப்பட்ட பாவை.

         2. கரிய   கண்ணையும்   வருத்தத்தையும்    உடைய
               கலைமான்  இறந்ததாக.    தாக்கலை     என்பதற்கு
               வருத்தத்தையுடைய  கலை  என   இவர்   பொருள்
               கொள்ள நச்சினார்க்கினியர்  தாவுகின்ற கலை  எனப்
               பொருள்கொண்டு தா என்பதற்குத் தாவுதல்  என்னும்
               பொருளும்  உண்டு    எனக்  கொண்டதை   அவர்
               உரையிற் காண்க.