92

உ-ம் :  ‘தாவினன்  பொன்தைஇய   பாவை’  எனவும்,   ‘தாவாக்
கொள்கை தகைசால்  சிறப்பினின்’  எனவும்  தா என்னும்  உரிச்சொல் முறையே வலியும் வருத்தமும் ஆகிய குறிப்புணர்த்தியது.

பொருள்:தாவு - பள்ளம் - வலி, வருத்தம்.

தெவ்வு
 

340.

1 தெவ்வுப் பகையாகும்                         (49)
 

ஆ. மொ. இல.

‘Tevvu’ is enmity

ஆல்.

‘Tevvu’ means enmity

இளம்.

வ-று :‘தெவ்வர் தேயத்து’ என்றக்கால், பகைவர் தேயத்து என்பதாம்.

சேனா.

(தெவுக்கொளற் பொருட்டே, தெவ்வுப் பகையாகும்)

இ-ள் :  ‘நீர்த்தெவு  நிரைத்  தொழுவர்’ ( மதுரைக். 89)  எனவும்,
‘தெவ்வுப்    புலம்’    எனவும்,   தெவுந்   தெவ்வும்,   முறையானே
கொள்ளுதலும் பகையுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் :தெவ்வு என்னுஞ்சொல் பகை என்னும் பொருள்படும், எ-று.

உ-ம் : தெவ்வுப் புலம்.

நச்.

இதுவுமது.

இ-ள் : தெவ்வு  பகை   ஆகும்   தெவ்வு  பகையாகிய   குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் :  2 ‘தெவ்வுப் புலம் சிதைய வெய்கணை சிதறி’  என  வரும்.


1. தெவ்வு  என்றிருப்பினும்  ‘தெவ்’  எனும்  சொல்லே கொள்க.
     (தெவ் + உ) உகரம் சாரியை.

2. பொருள் : பகைப்புலம் சிதையும்படி எய்யக்கூடிய கணைகளைச்
               சிதறி.