93

வெள்.

(தெவுக் கொளற் பொருட்டே, தெவ்வுப் பகையாகும்)

இ-ள் : தெவு    என்னும்       உரிச்சொல்    கொள்ளுதலாகிய
குறிப்புணர்த்தும். தெவ்வென்னுஞ்  சொல் பகையாகிய குறிப்புணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘நீர்தெவு நிரைத்தொழுவர்’ எனவும்,‘தெவ்வுப் புலம் சிதைய
வெய்கணைசிதறி’ எனவும் வரும்.

ஆதி.

பொருள் : தெவு........கொள்கிற.

விறப்பு, உறப்பு, வெறுப்பு
 

341.

விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே.            (50)

(விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே)
 

ஆ. மொ. இல.

‘Viŗappu’ ‘uŗappu’ and ‘Veŗuppu’ mean density.

ஆல்.

‘Viŗappu’ ‘uŗappu’ and ‘Veŗuppu’ mean density.

பி. இ. நூ.

இல. வி. 282-2

விறப்பே செறிவும்...விளக்கலும்.

இளம்.

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இவையெல்லாம்  குறிப்பு.

வ-று : ‘விறந்த  காப்பொடு’  என்றக்கால்,  செறிந்த   காப்பொடு
என்பதாம்.

‘உறந்த  விஞ்சி  யுயர்நிலைமாடம்’   என்புழி,   செறிந்த   இஞ்சி
என்பதாம்.

‘வெறுத்தார்’   (புறம்53) என்றக்கால், செறிந்தார் என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘விறந்த  காப்போ  டுண்ணின்று  வலியுறுத்தும்’  எனவும்,
‘உறந்த  விஞ்சி’  எனவும், 2 ‘வெறுத்த  கேள்வி  விளங்கு


1. பொருள் : செறிந்த மதிலும் உயர்ந்த நிலையையுடைய மாடமும்.

2. பொருள் : செறிந்த கேள்வியறிவுடைய விளங்கும் புகழையுடைய
      கபிலன்.