95

ஆ.மொ; இல.

Of them ‘Viŗappu’ dread also

ஆல்.

Among them ‘Viŗappu’ means, also dread.

பி. இ. நூ.

இல.வி. 2822

விறப்பே...வெருவலும் விளக்கலும்.

இளம்

வ-று : 1‘கோடு முற்றி  யளந்த காரொடு விறந்தே’  என்றக்கால்,
வெரீஇ என்பதாம்.

சேனா

இ-ள் : 2‘அவலெறி யுலக்கைப் பாடு விறந்தயல (பெரும் பாண்.226)
என   விறப்பு   என்பது   செறிவே   யன்றி  வெருவுதற்   குறிப்பும்
உணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் :  அவற்றுள் விறப்பு என்னுஞ்சொல்,  வெரூஉதல் என்பதன்
பொருள்படும், எ-று.

உ-ம் : ‘அவலெறி யுலக்கைப் பாடு விறந்தயல   (பெரும்பாண்226).

நச்.  

இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

இ-ள் : அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். - அம்
மூன்றனுள்  விறப்புச்  செறிவேயன்றி வெருவுதற்குறிப்பும்   உணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘அவலெறி உலக்கைப் பாடுவிறந்  தயல’  (பெரும்பாண்226)
எனவரும்.

வெள்.

இ-ள் : (நச். உரையே).


1. பொருள் : கொம்புமுதிர்ந்து அமைந்த கரியகாளையொடு அஞ்சி.

2. பொருள் : அவலைக்குற்றும்   உலக்கைப்  பாட்டுக்கு   அஞ்சி,
               அயல.