அரவமேயன்றி இரக்கமும் கேடுமாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. தெய். இ-ள் : மேற்சொல்லப்பட்டனவற்றுள், அழுங்கல் என்னுஞ் சொல் இரக்கம் என்பதன் பொருண்மையும், கேடு என்பதன் பொருண்மையும்படும், எ-று. உ-ம் : ‘மகவீழ்ந், தழுங்கிய’ இஃது இரக்கம். ‘குளை வழுங்கக் குற்றமுழை நின்று கூறும் (நாலடி. 353) இதுகேடு. நச். இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி இ-ள் : அவற்றுள் அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். அந்நான்கனுள் அழுங்கல் அரவமேயன்றி இரக்கமும் கேடுமாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘பழங்கண் ணோட்டமும் நலிய’ ‘அழுங்கின னல்லனோ அயர்ந்தனன் மனனே’ (அகம். 66) ‘குணனழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு’ (நாலடி. 353) எனவரும். வெள். (நச். உரையே) ஆதி பொருள் : அழுங்கல் - அழுத்துதல் - இரக்கம், கேடு, துன்பம். கழுமு |