சேனா ‘கழுமிய ஞாட்பு’ (களவழி. 11) எனக் கழும் என்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று. சேனா இ-ள் : கழும் என்பது மயக்கம் என்பதன் பொருள்படும், எ-று.. உ-ம் : ‘கழுமிய ஞாட்பின்’ (களவழி. 11) நச். இதுகுறிப்பு. இ-ள் : கழுமு என்கிளவி மயக்கம் செய்யும் கழுமு என்னும் சொல் மயக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தா ரிட்ட’ (களவழி. 11) எனவரும். இது, 1 ‘கழும் முடித்துக் கண்கூடு கூழை’ (கலி. 56.3) எனத் திரட்சியை யுணர்த்துதல் ‘கூறிய கிளவி’ என்பதனால் கொள்க. வெள் இ-ள் : கழும் என்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘கழுமிய ஞாட்பு’ எனவரும். ஆதி பொருள் : கழு ஈட்டிமுனை மயக்கம் தரு. செழுமை |