‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ என்பது, 1கொழுந்தடி தின்ற என்பதாம்; கொழுப்பு என்பது ஊன் பற்றிய நிணம். சேனா. இ-ள் : ‘செழும்பல் குன்றம்’ எனவும், ‘செழுந்தடி தின்ற செந்நாய்’ எனவும், செழுமை வளனும், கொழுப்புமாகிய பண்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : செழுமை என்பது வளன் என்பதன் பொருளும் கொழுப்பு என்பதன் பொருளும்படும், எ-று. உ-ம் : ‘செழும்பல் குன்றம்’ இது வளம். செழுந்தடி தின்ற செந்நாய்’ இது கொழுப்பு. நச். இதுவுமது. இ-ள் : செழுமை வளனும் கொழுப்பும் ஆகும் செழுமை வளனும் கொழுப்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்’ ‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ எனவரும். வெள். இ-ள் : செழுமை என்பது வளனும் கொழுப்புமாகிய பண்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘செழும்பல் குற்றம்’ எனவும், ‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ எனவும் முறையே வளமும் கொழுப்பும் உணர்த்தியது. ஆதி பொருள் : செழுமை - செழிப்பான - வளமான கொழுப்பான. விழுமம் |