102

பி. இ. நூ

இல. வி. 282.7

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்

இளம்

வ-று : ‘விழுமியர்’   என்றக்கால்,   சீரியர்    என்பதாம். ‘விழும
முற்றிருந்தார்’ என்றக்கால்,  இடும்பையுற்றிருந்தார் என்பதாம்.

சேனா

1 (பாடம் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாம்)

இ-ள் : 2‘விழுமியோர்க் காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி.159)
எனவும், 3வேற்றுமையில்லா   விழுத்திணைப்   பிறந்து’    (புறம். 27)
எனவும்,  4‘நின்னுறு  விழுமம்  களைந்தோள்’   (அகம். 170) எனவும்,
விழுமம்    முறையானே   சீர்மையும்   சிறப்பும்    இடும்பையுமாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

தெய்

பாடம் : விழுமம்,

சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும்)

இ-ள் : விழுமம்  என்பது  சீர்மை என்பதன்  பொருளும்  சிறப்பு
என்பதன் பொருளும் இடும்பை என்பதன் பொருளும் படும், எ-று.

உ-ம் : ‘விழுமியோர், காண்டொறும் செய்வர் சிறப்பு’  (நாலடி. 159)
- இது சீர்மை.‘வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து (புறம். 27)- இது
சிறப்பு. ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’  (அகம். 170) இது   இடும்பை.

நச்.

(பாடம் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்) இதுவுமது.


1இளம்பூரணரை    யொழிந்தோர்   சீர்மைக்கும்    சிறப்புக்கும்
     வேறுபாடுண்டு  எனக்  கொண்டமையின்  இப்படிப்     பாடம்
     கொண்டனர்.

பொருள் : 2. சீரியோரைக் காணுந்தொறும் சிறப்புச் செய்வர்.
            3.
வேறுபாடில்லாத சிறந்த குலத்திற் பிறந்து.
            4.
 
நினக்குற்ற துன்பத்தைப் போக்கினவள்.