இ-ள் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘விழுமியோர், காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159) வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம். 27) ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ (அகம். 170) என வரும். வெள் பாடம் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்) இ-ள் : விழுமம் என்னுஞ் சொல் சீர்மை சிறப்பு இடும்பை என்னும் குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘விழுமியோர்க் காண்டொறும் செய்வர் சிறப்பு நாலடி 159) எனவும், வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து’ எனவும், ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ எனவும் முறையே சீர்மையும் சிறப்பும் இடும்பையும் உணர்த்தியது. ஆதி (பாடம் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்) பொருள் : விழு - விழுதல் - விழுமம் - துன்பம் - விழுப்பம் - சிறப்பு கருவி |