தெய் இ-ள் : கருவி என்னுஞ் சொல் தொகுதி என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : ‘கருவி வானம்’ (புறம். 159) நச். இதுவுமது இ-ள் : கருவி தொகுதிகருவி தொகுதியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உணர்த்துங்கால் பலவற்றது கூட்டத்தை விளக்கும். உ-ம் : ‘கருவி வானம் கதழுறை சிதறி’ (அகம். 4) என வரும். ஆண்டு மின்னும் முழக்கும் காற்றும் என்பன இத்தொகுதி. வெள் இ-ள் : (அடுத்த சூத்திரத்து இணைத்து எழுதப்பட்டுள்ளது) ஆதி பொருள் : கருவி - ஆயுதம் - தொகுதி, கூட்டம் கமம் |