1‘இயமரம் இயம்பும்’ எனவே ஒலிக்கும் என்பதாம். 2‘முரஞ்சிரங்கு முற்றம்’ என்றக்கால், இசைக்கும் என்பதாம். சேனா. இ-ள் : ‘வரிவளை துவைப்ப’ எனவும், 3‘ஆமா நலலேறு சிலைப்ப’ (முருகு. 315) எனவும், 4கடிமரந்தடியுமோசை தன்னூர், நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம். 36) எனவும், 5‘ஏறிரங் கிருளுடை’ (கலி. 46) எனவும், துவைத்தல் முதலாயின இசைப் பொருள் உணர்த்தும், எ-று. தெய் இ-ள் : துவைத்தல் என்னும் சொல்லும் சிலைத்தல் என்னும் சொல்லும் இரங்கல் என்னும் சொல்லும் இயம்பல் என்னும் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய சொல், எ-று. உ-ம் : ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்வேறு சிலைப்ப’ ‘ஏறிரங் கிருளுடை’, ‘கடிமரந் தடியுமோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப.’ நச் இஃது இசை. இ-ள் : துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட்கிளவி என்மனார்புலவர்துவைத்தல் முதலிய நான்கும் இசைப் பொருளை உணர்த்தும் சொல்லாம் என்று கூறுவர் புலவர், எ-று. உ-ம் :‘முரசு கடிப் பிகுப்பவும். வால்வளை துவைப்பவும்’ (புறம்.158) ‘ஆமா நல்லேறு சிலைப்ப (முருகு. 315) ‘கடிமரந்தடியு மோசை தன்னூர், நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப, (புறம் 36)
பொருள் : 1. வாத்தியம் ஒலிப்ப. 2. முரஞ்சு ஒலிக்கும் முற்றம். 3. காட்டுப் பசுவும் ஏறும் ஒலிப்ப 4. காவல் மரத்தை வெட்டும் ஓசை தன் ஊரில் நெடுமதிலகத்துள்ள அரண்மனைக் கண் ஒலிக்க. 5. ஆனேறு ஒலிக்கும் இருளில் |