110

‘ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம் பெறா அன்’
    (கலி. 46) எனவரும்

வெள்

இ-ள் : துவைத்தல்  சிலைத்தல்   இயம்பல்  இரங்கல்   என்னும்
உரிச்சொற்கள் இசைப் பொருளுணர்த்தும், எ-று.

உ-ம் :‘வரிவளை துவைப்ப’,   ‘ஆமா   நல்லேறு     சிலைப்ப’,
‘கடிமரந்தடியுமோசை    தன்னூர்நெடுமதில்   வரைப்பிற்    கடிமனை
யியம்ப’, ஏறிரங் கிருளிடை’ என வரும்.

ஆதி

பொருள் :துவைத்தல்
சிலைத்தல்
இயம்பல்
இரங்கல்
-
-
-
-
துணிதுவைத்தல்
..............
சொல்லுதல்
இரக்கப்படல்
-
-
-
-
ஒலிக்குறிப்பு
ஒலிக்குறிப்பு
ஒலிக்குறிப்பு
ஒலிக்குறிப்பு

இரங்கல் (மேலும் ஒரு பொருள்)
 

353.

அவற்று
ளிரங்கல் கழிந்த பொருட்டு மாகும்               (62)

(அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

Of them,‘irańgal’ means repentance also

ஆல்.

Among them ‘irańkal’ will also mean repentance

இளம்.

உம்மை   யிறந்தது தழீஇ யிற்று.

1 ‘உடையதிகழ்ந் துயிரிரங்கி யிருந்தார்’  என்றக்கால்,   கழிவினை
விளக்கும், ஈண்டு இரக்கம்.

சேனா.

இ-ள் :2 ‘செய்திரங்கா வினை’ (புறம் 10) என இரங்கல்  இசையே
யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.


1. பொருள்:உடையதை இகழ்ந்து உயிர்கழிந்ததற்கு இரங்கியிருந்தார்.

2. பொருள்:செய்து பின் அது கழிந்ததற்கு இரங்காவினை (தொழில்)