கழிந்த பொருள் பற்றி வரும் கவலையைக் கழிந்த பொருள் என்றார். தெய் : இ-ள் : மேற் சொல்லப்பட்டவற்றுள் இரங்கல் என்பது கழிந்தது என்னும் பொருளையும் உடைத்தாகும், எ-று. உ-ம் : ‘செய்திரங்கா வினை’ (புறம் 10) நச். இஃது எய்தியதன் மேற்சிறப்பு விதி. இ-ள் : அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும் அந்நான்கனுள் இரங்கல் இசையே யன்றி ஒரு பொருளது கழிவால் பிறந்த வருத்தமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘செய்திரங்கா வினைச்,சேண் விளங்கும் புகழ்’ (புறம் 10, 11) என வரும். இஃது ‘இனி நினைந் திரக்க மாகின்று’ (புறம் 243) என இரக்கம் எனவும் நிற்கும். வெள். இ-ள் : மேற்குறித்த உரிச் சொற்களுள் இரங்கல் என்பது இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. கழிந்த பொருள்பற்றி வரும் கவலையைக் கழிந்த பொருள் எனக் குறித்தார். உ-ம் : ‘செய்திரங்கா வினை’ எனவரும். ஆதி. பொருள் :இரங்கல் - இரக்கப்படல் - ஒலிக்குறிப்பு. இலம்பாடு, ஒற்கம் |