சேனா. இ-ள் : ‘இலம்படுபுலவர் ஏற்ற கை நிறைய’ (மலைபடு.576) எனவும், 1‘ஒற்கல் ஒற்கம் சொலிய’ (புறம். 327) எனவும் இலம்பாடும் ஒற்கமும் வறுமையாகிய குறிப்புணர்த்தும், எ-று. இலம் என்னும் உரிச்சொல் பெரும்பான்மையும் பாடு என்னுந் தொழில் பற்றியல்லது வாராமையின் இலம்பாடு என்றார். தெய். இ-ள் : இலம்பாடு என்னும் சொல்லும் ஒற்கம் என்னும் சொல்லும் வறுமை என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : ‘இலம்படு புலவர் ஏற்றகை நிறைய’ (மலைபடு.576), ‘ஒற்கல் ஒற்கஞ் சொலிய’ (புறம். 327) நச். இதுவுமது. இ-ள் : இலம்பாடு இலம் என்னும் சொல் குறிப்புச்சொல் தன்மைப்பட்டு இன்மை என்னும் உரிச்சொல்லாய் நின்றதும், ஒற்கம்ஒற்கம் என்னும் உரிச்சொல்லும், ஆயிரண்டும் வறுமைஆகிய அவ்விரண்டும் வறுமை என்னும் உரிச்சொற்பெயரது குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘இலம்படு புலவர் ஏற்ற கைநிறைய’ (மலைபடு. 576) ‘ஒற்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்’ (புறம். 327) எனவரும். ‘இலம்படுபுலவர்’ என்பதற்கு ‘இல்லாமையுண்டாகின்ற புலவர்’ என அல்வழியாகப் பொருள் உரைக்க, இதற்கு உரையாசிரியர் ‘இலத்தாற் பற்றப்படும் புலவர்’ என வேற்றுமையாகப் பொருள் கூறினாரால் எனின், ஆசிரியர். ‘அவ்வழியெல்லாம் மெல் லெழுத்தாகும்’ (எழு. புள்ளி. 19) என அவ்வழியே கூறத் தொடங்கி, ‘அகமென் கிளவிக்குக் கைமுன் வரின்’ (எழு. புள்ளி. 20) எனப் பண்புத் தொகையும் ‘இலமென் கிளவிக்கு’ (எழு. புள்ளி. 21)
1. பொருள் : சுற்றத்தின் வறுமை நீங்க, இலம் என்பது வறுமை எனும் பொருள்தரின் உரிச்சொல். இல்லேம் எனும் பொருள்தரின் குறிப்பு வினைமுற்றுச்சொல். |