என அல்வழிக்கண் வரும் உரிச்சொல்லும் கூறிப் பின்னர் எண்ணுப் பெயரும் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் கூறிப் ‘படர்க்கைப் பெயரும்’ (எழு. புள்ளி. 25) என்னுஞ்சூத்திரத்தின் ‘வேற்றுமையாயின் என மீட்டும் வேற்றுமையையெடுத்து ஓதினமையின், ‘இலம்’ என்பதனை வேற்றுமையென்றல் பொருந்தாமை யுணர்க. இலம் என்னும் சொல் ‘யாம் பொருள் இலம்’ என முற்றுச் சொல்லாயும், ஒருகால் உரிச்சொல்லாயும் நிற்கும் என்பது உணர்த்துதற்கு ‘இலத்திற்கு உரிச்சொல் தன்மைப்பட்டு நிற்குமிடத்து’ என்றார். ‘இலமென் கிளவிக்குப் படுவருகாலை’ என நிலைமொழி வருமொழி செய்து முன்னர் ஆசிரியர் புணர்த்தமையின் ‘இலம்பாடு என ஒரு சொல்லாக ஓதாமையுணர்க. ‘இலம்பாடு நாணுத்தரும்’ (சிலப். 9, 11) என்றதோ எனின் ‘இல்லாமை யுண்டாதல் நாணுத்தரும்’ எனப் பொருள் கூறிக் கொள்க. வெள். இ-ள் : இலம்பாடு ஒற்கம் என்னும் அவ்விரண்டு சொற்களும் வறுமை என்னும் குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘இலம்படு புலவர் ஏற்றகை நிறைய’ எனவும், ‘ஒக்கல் ஒற்கம் சொலிய’ எனவும் வரும். ஆதி. பொருள் : இலம்பாடு - இல்லையென்னும் நிலை - வறுமை ஒற்கம - தளர்ச்சி - வறுமை ஞெமிர்தல், பாய்தல் |