இ-ள் : ‘வயக்கஞ்சால் சீர்த்தி’ எனவும், ‘இரவரல் மாலையனே’ (குறிஞ்சி. 239) எனவும், சீர்த்தியும் மாலையும், பெரும் புகழும் இயல்புமாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய் இ-ள் : மாலையென்னும் சொல் இயல்பு என்னும் பொருள்படும், எ-று, உ-ம் : 1 ‘குறிப்பேவல் செயல் மாலைக் கொளை நடையந்தணீர்’ (கலி. 9) நச் (சீர்த்தி மிகுபுகழ் மாலை யியல்பே) இதுவுமது; இ-ள் : சீர்த்தி மிகுபுகழ்மாலை இயல்பேசீர்த்தி மிகுபுகழும் மாலை இயல்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘வயக்கஞ்சால் சீர்த்தி.’ ‘இரவரல் மாலையனே’ (குறிஞ்சிப். 239) என வரும். வெள் (சீர்த்தி மிகுபுகழ் மாலையியல்பே) இ-ள் :சீர்த்தி என்னுஞ்சொல் பெரும்புகழ் என்னும் குறிப்புணர்த்தும்; மாலை யென்னுஞ் சொல் இயல்பு என்னும் குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘வயக்கஞ்சால் சீர்த்தி’ எனவும், ‘இரவரல் மாலையனே எனவும், சீர்த்தி மாலை என்னும் சொற்கள் முறையே பெரும் புகழும் இயல்பும் ஆகிய குறிப்புணர்த்தின. ஆதி உ-ம் : சீர்த்தி - சிறப்பு - மிக்கபுகழ் மாலை-பொழுது, பூமாலை-வரிசை, இயல்பு.
1. பொருள் : ஐம் பொறியும் நுமக்கு ஏவல் செய்தலை இயல்பாகவுடைய கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணீர். |