45

கூர்ப்பு, கழிவு
 

308.

 

கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்                 (17)

(கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்)
 

ஆ.மொ.இல.

‘Kūrppu’ and ‘Kalivu’ denote excess

ஆல்

‘Kūrppu’ and ‘Kalivu’ mean superiority

பி. இ. நூ.

இல. வி. 381-6

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறத்தலும்.

முத்து. ஒ. 37

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்,

இளம்.

வ-று : ‘உப்புக் கூர்ந்தது’,  உப்புக்  கழிந்தது  என்பன  சிறப்புச்
சொல்லாயவாறாம்.

சேனா

இ-ள் : ‘துனிகூர் எவ்வமொடு’ (சிறுபாண். 39) எனவும், ‘கழி
கண்ணோட்டம்’  (பதிற்.  22)  எனவும்  கூர்ப்பும்  கழிவும் ஒன்றனது
சிறத்தலாகிய குறிப்பை யுணர்த்தும், எ-று.

உள்ளது என்றது முன்சிறவா துள்ளது என்றவாறு.

தெய்

இ-ள் : கூர்ப்பு  என்பதூஉ-ம்,  கழிவு  என்பதூஉ-ம் முன்புள்ள
தன்கண் மிகுதியைக் குறித்து வரும், எ-று.

உ-ம் : ‘துனிகூர் எவ்வமொடு’ (சிறுபாண். 39) ‘கழி கண்ணோட்டம்’
(பதிற். 22)

நச்

இதுவுமது.

இ-ள் : கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் கூர்ப்பும் கழிவும் முன்
சிறவாது உள்ளது ஒன்று சிறத்தலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.


1.சிறப்பு-மேல்மேல் உயர்தல்.