உ-ம் : 1 ‘இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனிகூர் எவ்வமொடு’ (சிறுபாண். 38, 39) 2 ‘சினனே காமம் கழிகண் ணோட்டம்’ (பதிற். 22) எனவரும். வெள் இ-ள் : கூர்ப்பு கழிவு என்னும் உரிச்சொற்கள் இரண்டும், முன்சிறவாது உள்ளது சிறத்தலாகிய குறிப்பு உணர்த்துவன, எ-று. உ-ம் : ‘துனிகூர் எவ்வமொடு’ எனவும், ‘கழி கண்ணோட்டம்’ எனவும், கூர்ப்பு கழிவு என்பன ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பை யுணர்த்தின. உள்ளது சிறத்தல் என்றது, முன்சிறவாது சுருங்கியுள்ளது பின் சிறந்து பெருகுதல் என்னும் குறிப்பினதாகும். இதனை மிகுதி என்னும் பொருளில் அடக்குவர் நன்னூலார். (நன். சொல். 455) ஆதி உ-ம் :கூர்ப்பு-கூர்மை-முன்னினும் சிறந்த கழிவு-தள்ளுபடி-சிறந்த. கதழ்வு, துனைவு. |