உ-ம் : ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற். 203), ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ (அகம். 9) நச் இதுவுமது. இ-ள் : கதழ்வும் துனைவும் விரைவின் பொருள - கதழ்வும் துனைவும் விரைவு என்னும் சொல்லினது குறிப்புடைய, எ-று. உ-ம் :அண்டர், ‘கயிறரி யெருத்தின் கதழுந் துறைவன்’ (குறுந். 117) ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ (அகம். 9) எனவரும். வெள். இ-ள் : கதழ்வு துனைவு என்னும் உரிச்சொற்கள் இரண்டும் விரைவாகிய குறிப்பினைப் பொருளாக வுடையன, எ-று. உ-ம் :‘கதழ்புரி நெடுந்தேர்’ எனவும், ‘துனைபரி நிவக்கும் புள்ளின்மான’ எனவும் கதழ்வும் துனைவும் விரைவென்னும் குறிப்புணர்த்தின. ஆதி உ-ம் : கதழ்வு............. .................. விரைவான அதிர்வு, விதிர்ப்பு |