சேனா. இ-ள் : 1 வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14), வார்கயிற் றொழுகை’ (அகம் 172) எனவும், போகுகொடி மருங்குல் ‘வெள்வேல் விடத்தரோடு காருடைபோகி’ (பதிற். 13) எனவும் ‘ஒழுகு கொடி மருங்குல்’, ‘மால்வரை யொழுகிய வாழை, (சிறுபாண். 21) எனவும், வார்தல் போகல் ஒழுகல் என்று மூன்று சொல்லும் நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : வார்தல் என்னும் சொல்லும், போகல் என்னும் சொல்லும் ஒழுகல் என்னும் சொல்லும் நேர்பு என்பதன் பொருண்மையும் நெடுமை என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. உ-ம் : வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14), ‘போகு கொடி மருங்குல்’ இவை நேர்மை. ‘வார்கயிற் றொழுகை’ (அகம் 173) ‘வெள்வேல் விடத்தரோடு காருடைபோகி’, ‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண். 21) இவை நெடுமை. நச். இது பண்பு. இ-ள் : வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருளவார்தல் போகல் ஒழுகல் என்ற மூன்று சொல்லும் நேர்மையும் நெடுமையும் உணர்த்தும் பண்பினைத் தமக்குப் பொருளாகவுடைய, எ-று. உ-ம் : ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையை’ (குறுந்.14) 2 ‘தெள்ளறல் தழீஇய வார்மண லடைகரை’ (அகம்.34) எனவும்,
1.பொருள்: வார்ந்து இலங்கு வைஎயிறு = நேர்மையாகி விளங்கும் கூரிய பல் வார்கயிற்று ஒழுகை = நீண்ட கயிற்றின் வெள்வேல்... போகி = மால்வரை ஒழுகிய வாழை = பெருமலையில் நீண்டவாழை 2.பொருள்: தென்றல் தழுவிய மணலடைந்த நீண்ட கரை. |