‘போகு கொடி மருங்குல்’ 1 ‘திரிகாய் விடத்தரொடு காருடைபோகி’ (பதிற். 13) எனவும், ‘ஒழுகு கொடி மருங்குல்‘ ‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண். 21) எனவும் வரும். வெள். இ-ள் : வார்தல் போகல் ஒழுகல் என்னும் மூன்று சொல்லும் நேர்மையும் நெடுமையும் ஆகிய பண்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘வார்ந்திலங்கு வையெயிற்று’ எனவும், ‘வார்கயிற்றொழுகை’ எனவும், வார்தல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. ‘போகு கொடி மருங்குல்’ எனவும், ‘வெள்வேல் விடத்தரோடு காருடைபோகி’ எனவும் போகல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. ‘ஒழுகுகொடி மருங்குல்’ எனவும், ‘மால்வரை யொழுகிய வாழை’ எனவும் ஒழுகல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. ஆதி. உ-ம் : வார்தல்-தலை வாருதல்-நீண்ட (வார்சிலை) போகல்-போகுதல்-நீளுதல் ஒழுகல்-ஒழுக்க-முறைநீளம் |