உ-ம் : ‘துணையிற் றீர்ந்த கடுங்கண்யானை’ (நற். 108) இது தன்வினை. நோய் தீர்த்தான் என்பது பிறவினை விடுத்தான் எனப்படும். இவ்வே-றுபாட்டான் இரண்டாக ஓதினார். நச். இது, குறிப்பு இ-ள் : தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும்தீர்தலும் தீர்த்தலும் விடல்’ என்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மையுடைத்தாம், எ-று. உ-ம் : ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) ‘நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மின்’ (சீவக.1275) எனவரும். இதனானே விடல் என்னும் உரிச்சொல் அடியாகப் பிறக்கும் பெயரும் வினையும் தன்வினையும் பிறவினையும் பற்றிப் பிறக்கும் என்பது உணர்த்தற்கு ‘விடற்பொருட்டு’ என்றார். ‘இயைபு’ என்பதற்கு ‘இயைப்பு’ என வழங்காது ‘இயைக்க’, ‘இயைவிக்க’ என வேறுபட்டு வழங்குதலின் தன்வினை பிற வினையுடன் ஓதாராயினர். ஒன்றென முடித்தலால், பிளத்தல், அணங்கல் என்றாற் போலத் தன்வினை பிறவினைக்குப் பொதுவாய் வருவனவும் கொள்க. இப்பிறவினை ‘தீர்வித்தல்’, ‘தீர்ப்பித்தல்’ என வாய்பாடு வேறுபட்டு இக்காலத்து வழங்குமாறும் உணர்க. வெள். இ-ள் : தீர்தல் தீர்த்தல் என்னும் இரண்டுரிச் சொற்களும் விடுதலாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) ‘நங்கையைச் செற்ற தீங்கு தீர்த்தனர் கொண்மின். (சீவக. 1275) ஆதி உ-ம் : தீர்த்தல், தீர்த்தல் முடித்துவிடல் நீங்குதல். சிவ. தீர்தல் தீர்த்தல் இரண்டுமே தன்வினைப் பொருளன என்பது சேனாவரையர் கருத்து. மற்றையோர் முறையே தன் வினை பிறவினைகளுக்குரியன எனக் கொண்டனர். ஆசிரியர் ‘விடற்பொருட்டு’ என்றது சிறப்புடையது. ‘விடு’ என்பது தன் வினைப் பகுதியாகவும் பிறவினைப் பகுதியாகவும் வரும். விடல் |