55

எனும்     தொழிற்  பெயர்க்குத்  தீர்தல்  எனும்  தன்வினைக்கேற்ப
விடுதல்  என்றும்,  தீர்த்தல்  என்னும்  பிற வினைக்கேற்ப விடுத்தல்
என்றும்   பொருள்  கொள்ளலாம்.   அவ்வாறு  கொண்டே  சேனா
வரையரை யொழிந்தோர் உதாரணம் தந்தனர். சேனாவரையர் மட்டும்
தீர்த்தலும்    தன்வினை   யென்றார்.   உதாரணம்   காட்டவில்லை.
நச்சினார்க்கினியர் அவரை மறுத்தார்.

இயைபு     என்பது  தன்வினை இயைப்பு  என்பது பிற  வினை.
இரண்டையும்  ஒரு  சூத்திரத்திற் கூறவில்லை யாசிரியர். ஏன் எனின்
இயைபு    என்பதையே    இயைக்க    இயைவிக்க   எனப்   பிற
வினைப்படுத்தலாம்.   இயைப்பு   என்பதை  அவ்வாறு  பிறவினைப்
படுத்த இயலாது. ஆதலின் சேனாவரையர் கூற்று ஆய்தற்குரியது.

கெடவரல், பண்ணை
 

313.

கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு     (22)

(கெடவரல் பண்ணை ஆஇரண்டும் விளையாட்டு)   
 

ஆ. மொ. இல.

‘Kedavaral’ and ‘Paņņai’ - these two mean games.

ஆல்.

The two ‘Ketavaral’ and ‘Paņņai’ mean games.

பி. இ. நூ.:

இல. வி. 281-9.

கெடவரல் பண்ணை விளையாட் டுணர்த்தலும்.

இளம்

வ-று : 1 ‘கெடவர லாயம்’ என்றக்கால், விளையாட்டாயம் என்பதாம்.

    2 ‘பண்ணைத்   தோன்றிய    எண்ணான்கு    பொருளும்’
என்றக்கால், விளையாட்டுள் தோன்றிய பொருள் என்பதாம்,


1. கெடவரல் ஆயம்-விளையாட்டுத் தோழியர் கூட்டம்.

2. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்-விளையாட்டுப்  பொருளாகத் தோன்றிய முப்பத்திரண்டு பொருள்.