56தொல்காப்பியம் - உரைவளம்

சேனா

இ-ள் : ‘கெடவர லாயமொடு’ எனவும், ‘பண்ணைத் தோன்றிய
வெண்ணான்கு   பொருளும்”   (மெய்ப்.   1)  எனவும்  கெடவரலும்
பண்ணையும் விளையாட்டாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : கெடவரல்   என்னுஞ்   சொல்லும்,  பண்ணை  என்னுஞ்
சொல்லும் விளையாட்டு என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் : ‘கெடவர லாயம்’, பண்ணைத்  தோன்றிய  வெண்ணான்கு
பொருளும்’ (மெய்ப். 1).

நச்.

இதுவும் அது,

இ-ள் : கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு கெடவரல்
பண்ணை என்னும்  அவ்விரண்டும் விளையாட்டாகிய குறிப்புணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘கெடவர லாயமொடு’

 ‘பண்ணைத்  தோன்றிய  எண்ணான்கு  பொருளும்’ 
எனவரும். விளையாட்டு என்றது விளையாட்டுக் கருத்தினை.

வெள்.

இ-ள் : கடவரல்  பண்ணை என்னும்  அவ்விரண்டு  சொற்களும்
விளையாட்டு என்னும் குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘கெடவர லாயமொடு’  எனவும், ‘பண்ணைத் தோன்றிய
எண்ணான்கு    பொருளும்’    எனவும்   அவ்விரு    சொற்களும்
விளையாட்டாகிய குறிப்புணர்த்தின.

ஆதி

உ-ம் : கெடவரல்-கேடுநேரல் - விளையாட்டு
          பண்ணை - திரட்டிக் கூட்டல் - விளையாட்டு

பாத்தி

தட, கய, நளி
 

314.

தடவுங் கயவு நளியும் பெருமை                   (23)

(தடவும் கயவும் நளியும் பெருமை)