ஆ. மொ. இல. ‘Tada’ ‘Kaya’ and naļi mean bigness ஆல். Tata Kaya Naļi mean bigness பி. இ. நூ.: முத்து. ஒ. 40 தடவொடு கயநளி பெருமைப் பொருள. இல. வி. 284-3, 4, 5. தடவே பெருமையும்....... சாற்றலும் கயவே பெருமையும்....... கருதலும் நளியே பெருமையும்....... நவிற்றலும் இளம். வ-று : ‘தடந்தோள்’ ‘கயவெள் ளருவி’ (அகம். 38) ‘நளிமலை நாடன்’ (புறம். 150) என வரும். சேனா. இ-ள் : 1‘வலி துஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’ (புறம். 294), 2‘கயவாய்ப் பெருங்கை யானை’ (அகம். 118), ‘நளிமலை நாடன்’ (புறம். 150) எனத் தடவும் கயவும் நளியும் பெருமையாகிய பண்புணர்த்தும், எ-று. தெய் இ-ள் : தட என்னும் சொல்லும் கய என்னுஞ் சொல்லும் நளியென்னுஞ் சொல்லும் பெருமை என்பதன் பொருள்படும். எ-று. உ-ம் : ‘தடக்கை’ (புறம். 294), ‘கயவாய்’ (அகம் 118) ‘நளி மலை’ (புறம். 150).
1. பொருள் : வலிமை பொருந்திய பெரிய கையையும் கூர்மை வாய்ந்த வாளையும் உடைய குட்டுவன். 2. பொருள் : பெரிய வாயையும் பெரிய கையையும் உடைய யானை. |