58தொல்காப்பியம் - உரைவளம்

நச்.

இது, பண்பு

இ-ள் : தடவும் கயவும் நளியும் பெருமைதடவும் கயவும்  நளியும்
பெருமையாகிய பண்புணர்த்தும், எ-று.

உ-ம் : 1 ‘வலி துஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’ (புறம், 394).
           2 ‘இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்
            பெருங்கை யானை’ (அகம். 118)
           3
‘நளிமலை நாடன் நள்ளியவன் எனவே’ (புறம். 150)
             எனவரும்.
           4
‘கயவர்’ (குறள். 1076) என்பது வழக்கு.

வெள்.

இ-ள் : தட கய  நளி என்னும் மூன்றுரிச் சொற்களும்  பெருமை
யென்னும் பண்புணர்த்துவன, எ-று,

உ-ம் : ‘வளிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’ (புறம். 394)
எனவும்,   ‘கயவாய்ப்  பெருங்கை  யானை’  (அகம்  118  எனவும்,
‘நளிமலை  நாடன்  நள்ளி’  (புறம்.  150)  எனவும்  பெருமையாகிய
பண்புணர்த்தின.

ஆதி.

பொருள்: தட கய நளி - பெரிய.
            தட-(மேலும் ஒரு பொருள்)
 

315.

அவற்றுட்
டடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்.            (24)

(அவற்றுள்
தடஎன் கிளவி கோட்டமும் செய்யும்).
 

1. பொருள் : வன்மை   தங்கிய   பெரிய   கையையும்  கூரிய
வாளையும் உடைய குட்டுவன்.

2. பொருள் : கரிய  பெண் யானையுடனும் கன்றுடனும் விரைந்து
சென்ற   பெரிய  வாயையும்  பெரிய  கையையும் உடைய ஆண் யானை.

3. பொருள் : அவன் பெரிய மலை நாடனாகிய நள்ளி  என்று

4. கயவர்  என்பது    சிறுமையுடையார்   என்னும்   பொருளில்
வழங்கும்   உலக    வழக்குச்    சொல்.   (அது  
பின்னர் இலக்கிய  வழக்காகவும் ஆகியது)