ஆ. மொ. இல. Of them, ‘tada’ means curve also ஆல். Among them ‘tata’ may also mean curve. பி. இ. நூ. இல. வி. 284-3. தடவே... கோட்டமும் சாற்றலும். இளம். உரை : தட என்பது பெருமையே யன்றிக் 1கோட்டப் பொருளினையும் விளக்கும், எ-று. வ-று :‘தட மருப்பு எருமை’ (நற். 120) எனவரும். சேனா (315, 316, 317 எண்கள் உள்ள மூன்று சூத்திரங்களுக்கும் சேர்ந்து உரை எழுதுதலின் இச்சூத்திரவுரையினை 317 ஆம் சூத்திரத்திற் காண்க.) தெய். (315, 316, 317 ஆம் சூத்திரங்களை ஒரே சூத்திரமாகக் கொண்டு உரை செய்வர். 317 ஆம் சூத்திரம் பார்க்க.) நச். இஃது எய்தியதன் மேல் சிறப்பு விதி. இ-ள் : அவற்றுள் தட என் கிளவி கோட்டவும் செய்யும்முற்கூறிய மூன்றனுள் தட என்னும் சொல் கோட்டம் என்னும் பண்பினையும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘தடமருப்பு எருமை’ எனவரும். வெள் இ-ள் : அம்மூன்றுரிச் சொற்களுள் தட என்னுஞ் சொல் வேற்றுமையே யன்றிக் கோடுதல் என்னும் பண்பையும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘தடமருப் பெருமை’ எனவரும். ஆதி பொருள் :தட-அகன்ற-கோடிய, வளைந்த
1. கோட்டம் வளைவு. |