நச்.
இதுவுமது. இ-ள் : கய என் கிளவி மென்மையும் செய்யும்கய என்னும் சொல் மென்மை என்னும் பண்பினையும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும். வெள். இ-ள் : கய என்னும் உரிச்சொல் பெருமையே யன்றி மென்மையாகிய பண்பையும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) எனவரும். மெல்லியோர் என்ற பொருளிற் ‘கயவர்’ என்னும் சொல் கீழோரைக் குறித்து வழங்குதலை உலக வழக்கிற் காணலாம். ஆதி. பொருள் :கய-கீழ்த்தர-மெல்லிய. |