61

நளி (மேலும் ஒரு பொருள்)
 

317.

நளியென் கிளவி செறிவு மாகும்                  (26)

(நளி என் கிளவி செறிவும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Nali’ means denseness also

ஆல்.

The morpheme Nali means being dense too.

பி. இ. நூ.:

நேமி. சொ. 58

நளி செறிவாம்.

இல.வி. 284-5

நளியே........ செறிவும் நவிற்றலும்

இளம்.

உரை : நளி    என்னும்  சொல்  பெருமையேயன்றிச் செறிவுப்
பொருளும் படும், எ-று.

வ-று :‘நளியிருள்’ என்றக்கால் செறியிருள் என்பதாம்.
         மூன்றிடத்து உம்மையும் இறந்தது தழீஇயின.

சேனா.

(315, 316, 317 ன் உரை)

இ-ள் : ‘தடமருப் பெருமை’ ((நற். 120) ‘கயந்தலை மடப்பிடி’ (நற்.
137),  நளியிருள்  எனத்  தடவென்  கிளவி  முதலாயின பெருமையே
யன்றிக் கோட்டமும் மேன்மையுமாகிய பண்பும், செறிவாகிய குறிப்பும்
உணர்த்தும், எ-று.

தெய்.

(315, 316, 317 ன் உரை)

இ-ள் :மேற்  சொன்னவற்றுள்,  தட என்னுஞ் சொல்  கோடுதல்
என்பதன்  பொருண்மையும், கய என்னும் சொல் மென்மை என்பதன்
பொருண்மையும்,     நளிதல்     என்பது    செறிதல்    என்பதன்
பொருண்மையும் படும், எ-று.

உ-ம் : ‘தடமருப் பெருமை’, ‘கயந்தலை மடப்பிடி‘ ‘நளியிருள்’.

நச்.

இதுவுமது.