இ-ள் : நளி என் கிளவி செறிவும் ஆகும். நளி என்னும் சொல் செறிவு என்னும் குறிப்பினையும் உணர்த்தும், எறு. உ-ம் : 1 ‘சிலைப்பு வல்லேற்றிற் றலைக்கைத் தந்துநீ நளிந்தனை வருதல் உடன்றன ளாகி’ (பதிற். 52) என வரும். வெள். இ-ள் : நளி யென்னும் உரிச்சொல் பெருமையேயன்றிச் செறிவு என்னும் குறிப்பினையும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘நளியிருள்’ என வரும். ஆதி பொருள் : நளி ,,,,,,,..........,,,, செறிந்த, அடர்ந்த. பழுது
|
ஆ. மொ. இல. ‘Paluthu’ means, uselessness. ஆல். Palutu means uselessness. இளம் வ-று : ‘பழுதே வந்தார்’ என்றக்கால், பயமின்றியே வந்தார் என்பதாம். சேனா. (இது முதல் மூன்று சூத்திரங்களுக்கு 320ல் உரை காண்க). தெய். இ-ள்: பழுது என்னும் சொல் பயனின்மை யுணர்த்தும், எ-று. உ-ம்: ‘பழுதுகழி வாழ்நாள்.’
1. பொருள் : சிலைக்கும் ( = தலை நிமிர்ந்து ஒலி செய்யும்) வலிய ஆனேற்றைப் போன்று இருந்த தலைக்கை கொடுத்து நீ மகளிர் கூட்டத்தில் நெருங்கியவனாய் வருதற்கு மாறுபட்டவளாய். |