63

நச்.

இது குறிப்பு.

இ-ள் : பழுது பயம்  இன்றே  பழுது  பயம் இன்மையாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘பழுது கழி வாழ்நாள்’ என வரும்.
 பழுது குற்றத்தை யுணர்த்துதல் வழக்கு.

வெள்.

(சூ. 320ல் காண்க)

ஆதி.

பொருள் : பழுது ஊனமுற்ற பயன்படா

சாயல்
 

319.

சாயன் மென்மை                              (28)

(சாயல் மென்மை)
 

ஆ. மொ. இல.

‘Sāyal’ means tenderness 

ஆல.்

‘Cāyal’ means softness.

இளம்.

வ-று :  ‘சாரல்  நாடன் சாயல்  மார்பு’  (பதிற்.  16)  என்றக்கால்,
மெல்லிய மார்பு என்பதாம்.

சேனா

இ-ள் : (320ல் காண்க)

தெய்.

இ-ள் : சாயல்  என்னும் சொல் மென்மை என்பதன் பொருள்படும்,
எ-று.

உ-ம் :  ‘சாயல் மார்பு’

நச்.

இது பண்பு.

இ-ள் : சாயல் மென்மை சாயல் என்னும் சொல் ‘மெய் வாய்  கண்
மூக்குச்   செவி   என்னும்   ஐம்பொறியான்  நுகரும்   மென்மையை
யுணர்த்தும், எ-று.