இ-ள் : ‘பழுது கழி வாழ்நாள்’, ‘சாயல் மார்பு’, மண்முழுதாண்ட எனப் பழுது முதலாயின பயமின்மையாகிய குறிப்பும் மென்மையாகிய பண்பும் எஞ்சாமையாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. தெய். இ-ள்: முழுது என்னுஞ்சொல் ஒழியாமையை உணர்த்தும், எ-று. உ-ம்: உலக முழுதாண்ட (சிலப். அந்தி 1.) நச். இது குறிப்பு. இ-ள் . முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டேமுழுது என்னும் சொல் எஞ்சாமையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘மண் முழுதாண்ட நின் முன்னோர் போல’ என வரும். வெள். (சூ. 318, 319, 320ன் உரை). இ-ள் : பழுது என்னும் சொல் பயனின்மையாகிய குறிப்பு உணர்த்தும், சாயல் என்னும் சொல் மென்மையாகிய பண்புணர்த்தும்; முழுது என்னும் சொல் எஞ்சாமையாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘பழுது கழி வாழ்நாள்’ எனவும், ‘சாயல் மார்பு’ எனவும் ‘மண்முழுதாண்ட’ எனவும் அவை முறையே பயனின்மையும், மென்மையும், எஞ்சாமையும் உணர்த்தின. பயனின்மையைக் குறிக்கும் பழுது என்னுஞ் சொல் குற்றத்தை யுணர்த்துதலை உலக வழக்கிற் காண்க. ஆதி. பொருள் : முழுது - முற்றும் - மீதியின்றி, குறைவின்றி. வம்பு |