பி. இ. நூ. நேமி. சொ. 56 வம்பு நிலையின்மை. இளம். வ-று : ‘வம்ப வடுகர்’, (அகம். 375) ‘வம்ப நாரை’ (அகம், 190) என்றக்கால் நிலையில்லாமை கூறியவாறாம். சேனா. இ-ள் : (சூ. 323ல் காண்க). தெய் இ-ள் : வம்பு என்னும் சொல் நிலையின்மையை உணர்த்தும், எ-று. உ-ம் : ‘வம்ப மாரி’ (குறுந். 66). நச். இதுவுமது, இ-ள் : வம்பு நிலையின்மைவம்பு நிலையின்மையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘வம்பு மாரியைக் காரென மதித்தே’ (குறுந். 66) எனவரும். வெள். பொருள் (சூ. 323ல் காண்க) ஆதி. பொருள், வம்பு - அக்கிரமம் - நிலையற்ற (வாசனை, புதிய) மாதர் |